வெண்முரசு ஒரு நுழைவாயில்

நம் நாட்டின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை, வெண்முரசு என்ற பெயரில்  நவீன நாவல் வரிசை எனும் புதிய வடிவில் 26 நாவல்களாக எழுதியிருக்கிறார் ஜெயமோகன். கிட்டத்தட்ட 25000 பக்கங்கள். ஏழாண்டுகளில் எழுதப்பட்டது. இந்நாவல் பற்றி அதிக அறிமுகம் இல்லாதவர்களுக்காக ஒரு அறிமுகம் என்ற அளவில் ஒட்டுமொத்தமாக இதன் உள்ளடக்கம் குறித்தும் இது விரிவாகப் பேசும் பல களங்களைக் குறித்தும் நான் சில விஷயங்களை சுட்டிக் காட்டியிருக்கிறேன். ஒரு அறிமுகம் என்ற அளவில் அது பயனுள்ளதாக இருக்கும்… Read More வெண்முரசு ஒரு நுழைவாயில்

வானத்தில் நட்சத்திரங்கள் – கடிதங்கள்

அக்கா, முதலில் உங்கள் பதிவுகள் நெருக்கமாக இருக்க காரணம் அதில் உள்ள காட்சித்தன்மை. மரமென சொல்லாமல் மாமரம் என்பதும் நோட்டிஸ் என சொல்லாமல் ரோஸ் நிற நோட்டிஸ் என்பதும் காட்சிகளை கண்முன் உருவாக்குகிறது. அதற்கு பிறகு அப்படியே நீங்கள் பாடிக்கொண்டு ஓடுவதை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அப்புறம் இயல்பாக வரும் நகைச்சுவை. இதில் ஏசு இயல்பாக இந்து கடவுள் ஆகிறார். அப்படிதான் ஆக முடியும். என் வீட்டில் சீன கடவுளை வணக்கும் வழக்கமொன்று இருந்தது. (அதன் காரணத்தை… Read More வானத்தில் நட்சத்திரங்கள் – கடிதங்கள்

வானத்தில் நட்சத்திரங்கள்

எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு முடிந்து கடைசி நாளன்று தோழிகளுடன் பள்ளியின் மாமரத்தடியில் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஸ்டீஃபன் சார் என்னைக் கூப்பிட்டு ஒரு ரோஸ் கலர் நோட்டீசை தந்து விட்டு சென்றார். அதில் இயேசுவின் வாழ்க்கை குறிப்பு எழுதப்பட்டு முடிவில் பாஸ்காவை காண வாரீர். இடம், நாள், நேரம். எல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது. அப்போதே தீர்மானித்துக் கொண்டேன். சைக்கிளில் வீட்டிற்குப் பறந்தேன். அம்மா இன்னும் வரவில்லை, பள்ளியில் கடைசி நாள் என்பதால் பார்ட்டி இருக்கும்.… Read More வானத்தில் நட்சத்திரங்கள்

பனி உருகுவதில்லை – கடிதங்கள்

மேடம், இக்கட்டுரை ஒரு தேர்ந்த எழுத்தாளருடையது என்பதை அது வளர்ந்து செல்லும் வடிவமும் இறுதியில் நிகழும் உச்சமும் காட்டுகிறது. சில புனைவுகளை வாசித்து முடிக்கும் போது இதுவரை சந்திக்காத இனியும் சந்திக்கப் போகாத முகமற்ற சக வாசகர்களை மனதில் பார்த்து புன்னகைத்துக் கொள்வேன். பின்னர் அவர்கள் ஒரு சிலரை ஒவ்வொருவராக சந்தித்து வருகிறேன். அவர்கள் வேறொரு தேதியில் வேறு ஊரில் இதே படைப்புகளை படித்திருப்பார்கள், கிட்டத் தட்ட அதே உணர்வை அடைந்திருப் பார்கள். ஒரு மலை ரயில்… Read More பனி உருகுவதில்லை – கடிதங்கள்

பனி உருகுவதில்லை

சில படங்கள் அல்லது புகைப்படங்கள் சிறு வயதில் நம் மனதில் அழியா படிமமாக நிலைத்து விடுகின்றன. அதன் கருத்துருவம் நம் எண்ணத்தில் பதிவதற்கு முன்பே இது நிகழ்ந்து விடுகிறது. அப்படி என் பத்து வயதிலிருந்து பதிந்த சித்திரம்  புத்தரின் படம் ஒன்று,  பனி படர்ந்த இமைய மலையின் புகைப்படம்  மற்றொன்று.  முன்னது  என் மாமா எனக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்து, பின்னது சோவியத் இதழில் வந்த வண்ணப் புகைப்படம்.  புத்தரின் மோன நிலை என்னை அமைதியிழக்க செய்தது.… Read More பனி உருகுவதில்லை

விட்டு வந்த இடம் – கடிதங்கள்

அன்பின் அருண்மொழி ❤ சில எழுத்து, emotionally நம்மள outburst ஆக வச்சுரும்ல. அப்படி ஆகக்கூடாதுன்னு யோசிச்சுட்டே படிச்சாலும், நம்மளக் கைவிடுறதை, அந்த எழுத்தே நிகழ்த்திருதுல. இன்னைக்கி உங்க ப்ளாக்ல, ‘விட்டு வந்த இடம்’ படிச்சப்ப அப்படி பீல் ஆச்சு. அதும் ‘’நான் எழுத்தில் சாதனைகள் நிகழ்த்த இயலாமல் கூடப் போகலாம். ஆனால் தன்னந்தனியாக அமர்ந்து தன் யாழை தானே மீட்டும் ஒரு கண்ணில்லாத பாணன் போல இலக்கியத்திலேயே மூழ்க விழைகிறேன்’ இது படிச்சப்ப, ஒரு மாதிரி… Read More விட்டு வந்த இடம் – கடிதங்கள்

விட்டு வந்த இடம்

நாங்கள் காதலிக்கும்போது ஜெயன் அவரிடம் ஐந்தாயிரம் புத்தகங்கள் இருப்பதாக என்னிடம் அடித்து விட்டிருந்தார். நானும் மலைத்து விட்டேன். காதலிக்க அதுவும் ஒரு காரணம். கனவுகளில் ஜெயனும் புத்தக அடுக்குகளும் மாறி மாறி வந்து என்னை இம்சித்தனர். பத்தாம் வகுப்பில் என்னை ஒரு தனியார் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று அப்பா விரும்பினார். அதுவரை அரசுப் பள்ளி. மிகப் பிந்திவிட்டது. பட்டுக்கோட்டையில் உள்ள செயிண்ட் இசபெல்லா பள்ளி. பெரிய காம்பவுண்டும், கட்டிடங்களுமாக மிரட்சியைத் தந்தது. நாங்கள் சென்றதுமே ஒரு சிஸ்டர்… Read More விட்டு வந்த இடம்

சின்னச் சின்னப் புரட்சிகள் – கடிதங்கள்

மேடம், நீங்கள் அந்த tvs இல் இருந்து விழுந்தது ஒரு சித்தாந்த வீழ்ச்சி, ஜெ வை மணந்தது ஒரு சித்தாந்த துரோகம் 😀. 1995 இல் என் சட்டக் கல்லூரி நாட்ககளில் “செயல் இதுவே சிறந்த சொல்” என்கிற மந்திர வாக்கியம் மூலம் எனக்கு தனது சுருட்டுடன் அறிமுகமானார் “சே”. அப்போது சோவியத் வீழ்ந்து ஐந்தாறு ஆண்டுகள் கடந்து இருந்தது. அதன் பின் அவர்தான் என் ஆதர்ச நாயகன். அதை தொடர்ந்து சேலத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி… Read More சின்னச் சின்னப் புரட்சிகள் – கடிதங்கள்

சின்னச் சின்னப் புரட்சிகள்

என் அப்பா மிகக் கண்டிப்பான நாத்திகர். பெரியார், அண்ணா பக்தர். திராவிட கட்சி பிடிப்பு தவிர அவருக்கு கொஞ்சம் மார்க்சிஸம், லெனினிசம் மீதும் பிடிப்பு உண்டு. அந்த விருப்பத்தினால் தான் என் தம்பிக்கு லெனின் கண்ணன் என்று பெயர் வைத்தார்.  நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது என் அப்பா  “இவர்தான் லெனின்” என்ற லெனின்- நினைவுக் குறிப்புகள், [அவரைக் குறித்து மற்றவர்கள் எழுதியது], எங்கெல்சின் “குடும்பம், தனிச்சொத்து, மற்றும் அரசு” என்ற இரு புத்தகங்களை தஞ்சாவூரிலிருந்து வாங்கி… Read More சின்னச் சின்னப் புரட்சிகள்

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கடிதம்

வணக்கம் அருண்மொழி நலமா? உங்கள் எழுத்துக்களை சொல்புதிது காலத்தில் படித்திருக்கிறேன். மறுபடியும் எழுதவந்தது வரவேற்கத்தக்கது. யாழ்ப்பாணத்தில் ஆறு இல்லை. ஆற்றில் குளித்தது கிடையாது. கால் நனைத்ததுதான். உங்கள் எழுத்தை படிக்கும்போது பரவசமாக இருக்கிறது. அதே எட்டு வயது என்னுடைய வயதுக்குள்ளும் இருக்கிறது. நான் அங்கே சென்றுவிட்டேன். அன்னக்கிளி நான் இன்னும் பார்க்கவில்லை. உங்கள் எழுத்தை படித்த பின்னர் என்ன வாழ்க்கை வாழ்ந்தோம் என்று வெறுப்பாக இருக்கிறது. இனிமேல் திரும்பி போகமுடியாது. இழந்தது இழந்ததுதான். கம்பியை பிடித்தபடி கால்களை… Read More எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கடிதம்