பறக்கும் புரவியின் குளம்போசை: கடிதங்கள்

அக்கா,

இந்த யூ-டியூப்பை ஏற்கனவே அனுப்பியுள்ளீர்கள். நானும் கேட்டிருக்கிறேன். இரண்டாவது முறை கேட்கும் போது என்ன வித்தியாசம்? ஒன்றுதான்.உடன் நீங்கள் வந்தீர்கள்.

மேடையமைப்பு முதல் கலைஞர்களின் விளையாட்டுத்தனம் வரை நீங்கள் ஒரு குழந்தை காணத்தவறிய அல்லது பொருட்படுத்த தவறியவற்றையெல்லாம் சுட்டிக்காட்டுவதுபோல காட்டிச் சொல்கிறீர்கள். நானும் வியக்க கண்கள் விரித்து ஒவ்வொன்றாக காண்கிறேன். அது நல்லனுபவம்.

இசையுடம் சேர்ந்து உங்கள் மொழியும் குழைவாகி உடன் வருகிறது. உங்கள் பரவசம் சொற்களாக கட்டுரை முழுவதும் விரவியுள்ளது.

ம.நவின்

வல்லினம், மலேசியா.

***

சிறப்பாக இசை தேர்வு அருணா . ராகேஷ் வாசிப்பது ஹரிபிரசாத் செளராஸ்யா வாசிப்பது போலவே இருந்தது . தென்னிந்திய புல்லாங்குழலை விட இந்த வட இந்திய பான்ஸுரி வகை புல்லாங்குழல் கேட்க இன்னும் நன்றாக இருக்கிறது . இதன் நீளமாக குழல் இசையில் விஸ்தாரணம் காட்ட உதவுகிறதது .இதில் வரும் reverbaration உம் அழகு . இசையின் ஆதார உணர்வை சரியாக தொட்டிருக்கிறீர்கள் – அதிலிருந்தே ஆண் – பெண் என்று அந்த இணைவை உங்களால் உருவாக்க முடிகிறது.

ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் அந்த வாத்தியமாகவே மாறிவிடுகிறார்கள் . இசை அவர்களின் விரல்கள் வழி ஒரு நடனமாகவும்
வெளிப்படுகிறது .

இசை வெளிப்படும் ஆழங்களுக்கு உங்களால் செல்ல முடிகிறது 👌😊

கார்த்தி சிட்னி.

***

பறக்கும் புரவியின் குளம்போசை – தலைப்பே மிக அழகு , குறிப்பாக ஜாகிர் ஹுசைனின் தபாலாவிற்கு வெகு பொறுத்தம். ஒளி , ஒலி என்று ஒவ்வொன்றையும் விவரித்திரிப்பது , வாசகனை, அந்த அரங்கத்தில் அமரவைக்கிறது. மூங்கில் விளையும் நாட்டில் புல்லாங்குழல் இசையுண்டு என்று நினைவில் வைத்துக்கொள்ள இலகுவான தகவல்கள்.
குழல் பெண்ணென , தாளத்தை ஆணென உருவகித்து சொன்னதால், நான் video போட்டு பார்க்கும்பொழுது அதே உணர்வுடன் பார்த்தேன்.நீங்கள் சொன்னதுபோல , நானும் ராதாவும் தாஜ் டீ மூலம்தான் ஜாகிரை அறிவோம்.

உங்கள் நடை அழகு, தனித்துவம் வாய்ந்தது என்று நானும் ராதாவும் பேசிக்கொண்டோம்.
👏👏👏💐

ஆஸ்டின் சௌந்தர்.

***

மேடம்,

இந்த பன்சூரி குழல் எனக்கு முதலில் இருந்தே பிடிக்காது, அதன் கார்வை குழலின் கூர்மையை சிதறடிக்கிறது என நான் உணர்கிறேன், அது போலவே தான் metalic flute ம். அது போக இந்த கச்சேரியின் இசை வடிவமும் எனக்கு உவப்பானதாக இல்லை. ஆகவே இந்த கச்சேரியை என்னால் முழுதும் கேட்க இயலவில்லை.

இவரின் தபலா – சந்தூரை கேட்டுள்ளேன் அவை அற்புதமானவை.

ஆனால் இக்கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மனதில் வேறொரு கச்சேரியை நிகழ்த்திக் கொண்டேன். புரவியின் வேகம் கூடிக் கொண்டே போய் திடீரென்று அந்தரத்தில் நின்றது போல ஜாகீரின் தியான நிலையை விவரித்து இருந்தீர்கள் அது ஒரு நிகர் அனுபவம், எழுத்து இசையை சந்தித்துக் விட்டது. ஒரு பறவை வரையும் கோலமும் ஒரு ஆண் பெண் வாழ்க்கை நடனமும் ஒரு இசை அனுபவத்தை விவரிக்க கையாளப்பட்ட அபாரமான உவமைகள்.

கிருஷ்ணன்

ஈரோடு.

***

One thought on “பறக்கும் புரவியின் குளம்போசை: கடிதங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s