யசோதை

இரண்டு நாட்களாக தஞ்சாவூரிலிருந்து ஒரு சேதியும் வரவில்லை. அத்தையும் பாட்டியும் பேசிக்கொள்ளவில்லை. முகத்தை எப்போதும் உம்மென்று வைத்துக் கொண்டிருந்தார்கள். என் அத்தை எப்போதும் சிரித்த முகத்துடன் தான் இருக்கும். என்ன ஆயிற்று? நான் அப்போதுதான் விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். ”அத்த, ஏன் எப்ப பாத்தாலும் ரெண்டு பேரும் உம்முன்னே இருக்கீங்க? அம்மாவும் அப்பாவும் எப்ப வருவாங்க?” அத்தையின் மடியில் உட்கார்ந்து அசைந்து கொண்டே அதன் தாவங்கட்டையை பிடித்தேன். அத்தை தலை கூட வாரிக்கொள்ளாமல் என்னமோ போல் இருந்தது.… Read More யசோதை

மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும் – பழனி ஜோதி

நலம் தானே? ‘மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்’ வாசித்து விட்டேன். அனைத்து லட்சணங்களும் அமையப் பெற்ற ஒரு அழகிய சிறுகதையை வாசித்த அனுபவம். டிஜிட்டல் படங்களும், செல்ஃபிக்களும் இல்லாத எண்பது – தொண்ணூறுகளின் பழக்கமொன்றுண்டு. நெருங்கிய உறவினர்களோ, நண்பர்களோ வீட்டுக்கு வரும்போது, உணவுண்ட பின் ஓய்வாக எல்லோரும் அமர்ந்து ஃபோட்டோ ஆல்பங்களைப் பரப்பி வைத்துப்  பார்ப்பது வழக்கம். பெரும்பாலும் கருப்பு வெள்ளை, வண்ணம் வெளிரிய கலர்ப்  படங்களில் நிறைந்திருக்கும் முகங்களின் அணிவகுப்பு. வீட்டில் ஒருவர் கதை சொல்லியாய்… Read More மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும் – பழனி ஜோதி

மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும் – கடிதங்கள்

அன்பான அக்கா, ‘வானத்தில் நட்சத்திரங்களுக்கு’ பிறகு மற்றுமொரு நல்ல சிறுகதை படித்த அனுபவம். ஒரு நல்ல புனைவு மனிதர்களைப் பற்றி நமக்கேற்படுத்தும் அறிமுகம் என்பது நம்மையும் அறிந்துகொள்வதுதானே. புனைவுகள் அவற்றை மீண்டும் நம் கண் முன்னால் நிகழ்த்திக்காட்டும்போது நாம் மீண்டும் காண்பது கடந்து வந்த அந்த சாம்பல் தருணங்களைத்தான். என்ன… நாம் அப்போது அதிலிருந்து வெளியில் நிற்போம். இந்தப் பதிவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானவர்கள். அவ்வளவு அழகாக அவர்கள் கதைக்குள் உருவாகி வருகிறார்கள்.  எல்லோரும் வியக்கும் அழகுகொண்ட… Read More மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும் – கடிதங்கள்

மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்

அந்த செய்தியை அப்பா அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததை  கேட்டதுமே எனக்கு படபடப்பாய் இருந்தது. கண்கூட இலேசாக இருட்டிக் கொண்டு வந்தது. உடனே ஜோதி டீச்சரின் முகம்தான் மனதில் வந்தது. போய் அவரிடம் சொல்லவேண்டும். அவர் எப்படி இதை எதிர்கொள்கிறார் என்று பார்க்கும் குரூர ஆசை ஒன்றும் மனதில் முகிழ்த்து அடங்கியது. செய்தி இதுதான். மனோகரன் சாருக்கு வீட்டில் பெண்பார்த்து முடிவு செய்து விட்டார்களாம். நிச்சயதார்த்தம் தான். அதற்கு தான் அவர் வியாழனிலிருந்து  லீவ் எடுத்து சென்று திங்கள்… Read More மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்

சின்னஞ்சிறு மலர் – கடிதங்கள்

அன்பான அக்கா, சின்னஞ்சிறு மலர் வாசித்தேன். பொதுவாக உங்கள் கட்டுரைகளை வாசிக்கும்போது அதுபோல எனக்கும் ஏற்பட்டுள்ள அனுபவத்தைதான் உடனடியாகப் பகிர தோன்றும். ஆனால் அது தவறு. ஒரு வாசகன் செய்யக்கூடாதது அதுவென நினைப்பேன். அப்படிப் பகிரும்போது எழுத்தாளர் தொட்டுள்ள ஆழம் செல்ல முடியாமல் மறுபடியும் தனது நினைவுகளிலேயே வாசகன் சுழன்றுக்கொண்டிருக்க நேரிடும். பின்னர் அவன் அடையும் இன்பமும் தவிப்பும் அவனது நினைவுகளை எண்ணியதாகவே இருக்கும். எனவே முதலாம் ஆண்டில் நுழைந்த நான் மூன்று மாதமாக பள்ளிக்குச் செல்லாமல்… Read More சின்னஞ்சிறு மலர் – கடிதங்கள்

சின்னஞ்சிறு மலர்

ஆசிரியர்களின் குழந்தைகளாக இருப்பதில் ஒரு சுகமும் உண்டு. அதே சமயம் ஒரு வலியும் உண்டு. அது ஒரு கொடுமை. சக ஆசிரியர்களின் கவனிப்பும், அக்கறையும் கிடைக்கும் அதே நேரம் பெரும்பாலான மாணவர்களின் பொறாமையும், பகைமையும் நம்மை சூழும். நான் இதையெல்லாம் வெட்டிவிட்டு அவர்களில் ஒன்றாகும் கலையைக் கற்றிருந்தேன். எல்லோரையும் போல எனக்கும் பள்ளியின் முதல் வகுப்பின் முதல்நாள் அனுபவம் மிகக் கொடுமையானதாக இருந்தது. அதுநாள்வரை அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு பீரியடுக்கும் அம்மா செல்லும் வகுப்பறைக்கு… Read More சின்னஞ்சிறு மலர்

மாயச்சாளரம் – கடிதங்கள்

அக்கா, சினிமா எனும் கலையின் வளர்ச்சியும் உடன் உங்கள் ரசனையும் மெல்ல மெல்ல மாறி, வளர்ந்து உச்சமாகச் செல்லும் தருணத்தில் கட்டுரையை முடித்துள்ளீர்கள். காட்சிகள், பாடலையும் வசனத்தையும் விளக்கும் இணை கலையாக ஒரு காலத்தில் இருந்த இந்திய திரைப்படங்கள், மெல்ல வளர்ந்து தனக்கான தனி கலை நுட்பங்களை உருவாக்கிக்கொண்ட காலத்தில் நீங்கள் அதன் முதல் தர ரசிகையாய் உருவாகியிருக்கிறீர்கள். உங்கள் பதிவுகளில் முக்கியமாக நான் நினைப்பது ஒரு கலை அனுபவத்தைப் பெறும் முயற்சியில் இறங்கும் நீங்கள், அதற்கு… Read More மாயச்சாளரம் – கடிதங்கள்

மாயச்சாளரம்

‘சம்பூர்ண ராமாயணம்’ படம் பார்க்கும்போது எனக்கு ஒன்பது வயது. நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் எங்கள் வீட்டில் அப்பாவின் ‘சாங்க்‌ஷ’ னுக்காக நாங்கள் ஒரு குட்டி நாடகமே போடவேண்டியிருக்கும். கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க போகும் வழியில் நானும் பாட்டியும் திட்டமிடுவோம். வெள்ளிக்கிழமையன்று வரவிருக்கும் படத்தின் போஸ்டரை வியாழக்கிழமை மாலை செல்வமணி மாமாவின் டீக்கடை வாசலில் பார்த்ததிலிருந்து திட்டமிடுதல் கட்டம், கட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கும். ஆலத்தூர் போன்ற சிறிய கிராமத்தில் சினிமாதான் வெளி உலகத்திற்கான ஜன்னல். மிகச்சிறிய ஜன்னல்.… Read More மாயச்சாளரம்

மலையில் பிறப்பது – கடிதங்கள்

ஜெயமோகன் ஓடி விளையாடும் ஒரு வீடியோ பார்த்தேன். நண்பர்கள் சிலருக்கு அதை அனுப்பினேன். ஜெயமோகன் ஏன் என்றென்றும் படைப்பு மனதில் இருக்கிறார் என அந்த வீடியோவில் காரணம் உண்டு என்றேன். அதில் ஓடுவது ஒரு பத்து வயது சிறுவன். தினம் தினம் மாணவர்களுடன் புழங்கும் என்னால் அதை உறுதியாகச் சொல்ல முடியும். ஓடுவது என்பது போட்டியாக இல்லாமல் ஓடுவதால் அடையும் இன்பம் ஒன்றுண்டு. அதை அடைய குழந்தமை கொண்ட மனதால் மட்டுமே முடியும். அவர்களால் மட்டுமே எப்போதுமே… Read More மலையில் பிறப்பது – கடிதங்கள்

மலையில் பிறப்பது…

சுந்தர ராமசாமியுடன் அவருடைய வீட்டில் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார், நாயர்களுக்கு காது கிடையாது என்று. அதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தேன். ஆகவே உடனடியாக ‘ஆமாம்’ என்று ஒரு தலையசைப்பின் மூலம் ஆமோதித்தேன். கடைக்கண்ணால் ஜெயனைப் பார்த்து நானும், சு.ராவும் புன்னகைத்துக் கொண்டோம். ஜெயன் அவசரமாக பேசும் விஷயத்தை திசைதிருப்ப முயன்று தோற்று பலவீனமாக புன்னகைத்தார். பிறகு இசை பற்றி கொஞ்ச நேரம் பேசும்போது சு.ரா. மாலியின் புல்லாங்குழல் பற்றி சிலாகித்து சொல்லி அவரைப் பற்றிய சில சம்பவங்களையும்… Read More மலையில் பிறப்பது…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.


Follow My Blog

Get new content delivered directly to your inbox.